பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 16, 2012

முக நூல் 16.07.12

தற்போது தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடி ஸ்பிரே விளம்பரங்களைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது... அதுவும் ஆண்கள் ஒரு அறையில் அரைகுறை ஆடையுடன் அதனை உபயோகிக்கும் போது எங்கிருந்தோ பெண்கள் எல்லோரும் அவனைத் தேடி வருவதாக வரும் விளம்பரம், பெண்களை மிக மோசமாக இழிவு படுத்துகிறது... எந்தப் பெண்ணும் இது குறித்து கவலைப் பட்டதாக தெரியவில்லை...

பெண்களை இது போன்று சித்தரிக்கும் காட்சிகளை எப்போது கண்டிக்கப் போகிறீர்கள் சகோதரிகளே...


முக நூல் 16.07.12



உன் நினைவோடு எதை எழுதினாலும் அழகாகி விடுகிறது... #கவிதை.

கோபத்தில் ஒளிந்திருக்கிறான் சாத்தான்
அவனை நானாக உருவாக்குவதில்லை
அவனை கொன்று விடவும் முடிவதில்லை...

கூர் தீட்டப் பட்ட கத்திகளே அதிகம்
தானாகவும் குத்தலாம்
மறைமுகமாக எறியவும் படலாம்
சாவைக் கண்டு பயந்தவனிடம் சொல்
ஒடிவிடக்கூடும்...

பல கவிதைகள்
உனக்காக எழுதப்படக் கூடும்
சில கவிதைகளோ காத்திருக்கிறது
உன்னால் மட்டுமே
எழுதப் பட வேண்டுமென...

எனக்குள் விழுந்த
ஒற்றைத் துளியாய் நீ
கடலும் வானும்
கலங்கிக் கிடக்கிறது... 

ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால் அதிலிருக்கும் சுவாரசியம் போய்விடுகிறது... :-(

விரல்களில் வண்ணத்துப் பூச்சி...

புகைப்படம்: கையிலிருக்கும் 
வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளை 
அசைக்கப் பார்க்கிறது 
நானோ அதை இரு விரல்களின் இடையில் 
இறுக்கிப் பிடித்திருக்கிறேன் 
நீ வந்ததும் விட்டு விடச் சொல்வாய் 
விட்டு விடுவேன் 
உன்னிடம் புன்னகை பிறக்கும் 
என் விரல்களில் படிந்திருக்கும் 
அதன் வர்ணங்கள் சொல்லும் 
நான் எவ்வளவு 
கொடூரமானவன் என்பதை...
கையிலிருக்கும்
வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளை
அசைக்கப் பார்க்கிறது
நானோ அதை இரு விரல்களின் இடையில்
இறுக்கிப் பிடித்திருக்கிறேன்
நீ வந்ததும் விட்டு விடச் சொல்வாய்
விட்டு விடுவேன்
உன்னிடம் புன்னகை பிறக்கும்
என் விரல்களில் படிந்திருக்கும்
அதன் வர்ணங்கள் சொல்லும்
நான் எவ்வளவு
கொடூரமானவன் என்பதை...

அவள் பள்ளிக்கு செல்கிறாள்...

புகைப்படம்: பள்ளிக்குச் செல்ல தயாராகி இருந்தாள்
சீருடை அணிந்திருந்தாள் 
கழுத்தில் அடையாள அட்டை 
கால்களில் கருப்பு வண்ண காலனி 
தட்டில் சிறிது சோறுடன் 
அம்மா நின்றிருக்க 
அருகில் இருந்த மரத்தை ஓடித் தொடுகிறாள்  
அம்மாவிடம் ஓடிவருகிறாள் 
ஒரு வாய் உண்கிறாள் 
மீண்டும் ஓட்டம் 
மீண்டும் மரம் 
மீண்டும் அம்மா 
மீண்டும் ஒரு வாய் 
பள்ளிக்கான வண்டி வருகிறது 
ஓடிச் செல்கிறாள் 
புத்தகப் பையை சுமந்து வருகிறாள் அம்மா
அதை மூன்று மாடிகள் சுமந்து 
அவள் வகுப்பை அடைகிறாள் 
மாலையாகிறது 
அதே வண்டி 
திரும்பி வரும் போது 
அவள் களைத்திருக்கிறாள்
விளையாடும் எந்த நொடியிலும் 
களைப்படைவதில்லை
ஏனோ பள்ளி விட்டு வரும் போது மட்டும்...
பள்ளிக்குச் செல்ல தயாராகி இருந்தாள்
சீருடை அணிந்திருந்தாள்
கழுத்தில் அடையாள அட்டை
கால்களில் கருப்பு வண்ண காலனி
தட்டில் சிறிது சோறுடன்
அம்மா நின்றிருக்க
அருகில் இருந்த மரத்தை ஓடித் தொடுகிறாள்
அம்மாவிடம் ஓடிவருகிறாள்
ஒரு வாய் உண்கிறாள்
மீண்டும் ஓட்டம்
மீண்டும் மரம்
மீண்டும் அம்மா
மீண்டும் ஒரு வாய்
பள்ளிக்கான வண்டி வருகிறது
ஓடிச் செல்கிறாள்
புத்தகப் பையை சுமந்து வருகிறாள் அம்மா
அதை மூன்று மாடிகள் சுமந்து
அவள் வகுப்பை அடைகிறாள்
மாலையாகிறது
அதே வண்டி
திரும்பி வரும் போது
அவள் களைத்திருக்கிறாள்
விளையாடும் எந்த நொடியிலும்
களைப்படைவதில்லை
ஏனோ பள்ளி விட்டு வரும் போது மட்டும்...

அவள் வாசம்....

புகைப்படம்: அவள் நேற்றும் வந்தாள்
என்னிடம் கேட்பதற்கு 
அவள் கேட்கும் ஒன்றை 
அவள் வரமாக நினைக்கும் ஒன்றை 
வெகு சுலபமாகத் தந்து விட முடியும் 
தயங்கியபடியே நிற்கிறேன் 
அவளோ தினமும் வருகிறாள் 
பகலிலும் 
இரவிலும் 
மெல்ல மெல்ல அவளை விட்டு விலகுகிறேன் 
அவள் என்னை நெருங்குகிறாள் 
விலகுவதை நிறுத்தி விடுகிறேன் 
நெருங்குவதை நிறுத்துவதாக இல்லை அவள் 
கண்களை மூடி 
அவளிடம் நான் பயந்து விட்டதை 
அவளிடமிருந்து மறைக்கிறேன் 
அவளுக்கும் தெரியும் 
அவள் கேட்பதை 
நான் அவளுக்கு கொடுத்து விட்டேன் என்பது  
என்னிடம் கொடுப்பதற்கு 
எதுவும் இல்லை என்பதும் 
காற்று வீசுகிறது 
அவள் வாசம் வருகிறது 
இப்பொழுது அவள் வரக் கூடும்...
அவள் நேற்றும் வந்தாள்
என்னிடம் கேட்பதற்கு
அவள் கேட்கும் ஒன்றை
அவள் வரமாக நினைக்கும் ஒன்றை
வெகு சுலபமாகத் தந்து விட முடியும்
தயங்கியபடியே நிற்கிறேன்
அவளோ தினமும் வருகிறாள்
பகலிலும்
இரவிலும்
மெல்ல மெல்ல அவளை விட்டு விலகுகிறேன்
அவள் என்னை நெருங்குகிறாள்
விலகுவதை நிறுத்தி விடுகிறேன்
நெருங்குவதை நிறுத்துவதாக இல்லை அவள்
கண்களை மூடி
அவளிடம் நான் பயந்து விட்டதை
அவளிடமிருந்து மறைக்கிறேன்
அவளுக்கும் தெரியும்
அவள் கேட்பதை
நான் அவளுக்கு கொடுத்து விட்டேன் என்பது
என்னிடம் கொடுப்பதற்கு
எதுவும் இல்லை என்பதும்
காற்று வீசுகிறது
அவள் வாசம் வருகிறது
இப்பொழுது அவள் வரக் கூடும்...