பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 13, 2012

முக நூல் 13.07.12

கடலில் பொழிந்தால் என்ன
மழை என்றே சொல்
வேறு எப்படியும்
சொல்ல இயலாது...

என் கனவுக்குள் விரியும்
இரவென நீ
ஒற்றை தீபத்தை கைகளில்
ஏந்தியபடி
சுகந்தம் வீசும் அவ்விரவை
தொலைத்து விடவில்லை நான்
எனினும்
அது கனவாகவே இருப்பதன்
கொடுமையும் எனக்கே....
 
இன்னும் ஏதோ ஒரு
ஒளிந்திருக்கும் சொல்லோ
பிரியமோ தான்
என்னை எழுத வைக்கிறது...

என் செய்திப் பெட்டியிலிருக்கும்
உன் செய்தித் துண்டுகளை
அடிக்கடி பார்க்கிறேன்
உன் குரலும்
முகமும்
அதில் இருக்கிறது...
 
போடி என
பாதியில் விட்டுச்
செல்கையில்
நீ அழுதது
விளையாட்டில்லை...

விளையாடும்
எந்த விளையாட்டிலும்
இருவருமே
தோற்றதில்லை
அதற்காகத் தானே
விளையாடுகிறோம்...

நீயும் நானும் விளையாடும்
சதுரங்கத்தில்
உன் முதல் குறி
என் ராணி
ஏன் என எனக்கு தெரியும்...

மயிலிறகும்
கனக்கத் தான் செய்யும்
காதலின்
தனிமை பொழுதொன்றில்...

என்னதான்
போலியாக
நீ நடித்தாலும்
உன் முகம்
எனக்கு தெரியும் தான்...



பொருளின் எடையை மதிப்பிடலாம் மனதின் சுமையை...



கவிதைகளையும், அதன் கருத்துகளையும் மட்டுமே பெண்கள் ரசிக்கிறார்கள். இதை புரிந்து கொண்டவன் தன் உறக்கத்திலிருந்து எழக்கூடும்...

 

போதை - கவிதை

புகைப்படம்: போதையேற்றிக் கொள்ளத் தேடுகிறேன் 
கவிதை ஒன்றை !!!
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் 
அது என்னை மயக்கத்தில் தள்ளும் 
மொழியினை குழறலாக்கும்
எதை சொல்கிறேன் 
சொல்ல நினைக்கிறேன் 
என்பதை அறிவிலிருந்து அகற்றும் 
வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள் 
ஒரு மேம்பட்ட கவிதை 
தன்னிடம் வீழ்த்தி 
தன்னுள் மூழ்கடித்து  
தன்னிலை மறக்கச் செய்வதைத் தவிர...
போதையேற்றிக் கொள்ளத் தேடுகிறேன்
கவிதை ஒன்றை !!!
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
அது என்னை மயக்கத்தில் தள்ளும்
மொழியினை குழறலாக்கும்
எதை சொல்கிறேன்
சொல்ல நினைக்கிறேன்
என்பதை அறிவிலிருந்து அகற்றும்
வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்
ஒரு மேம்பட்ட கவிதை
தன்னிடம் வீழ்த்தி
தன்னுள் மூழ்கடித்து
தன்னிலை மறக்கச் செய்வதைத் தவிர...

துரோகி...

என்னை துரோகி என்று சொல்
சந்தர்ப்பவாதி என்று முறையீடு
காமுகன் என்று பெயர் சூட்டு
நம்பிக்கை கொல்பவன் என செய்தி பரப்பு
ஆம் நான் அப்படியானவன் தான்
சிறிது நாட்களுக்கு முன்
நான் இப்படியானவன் என தெரிந்திருக்க
நியாயமில்லை தான்
ஏனெனில்
அப்பொழுது
என்னை நேசித்துக் கொண்டிருந்தாய்
நானோ எப்பொழுதும்
ஒரே மாதிரியாக இருக்கிறேன்
பாறைகள் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை
மேகங்கள் உருமாறியபடியே...

நாத்திகன்...

பூக்கள் மலரும் போதும்
பறவைகள் சிறகு விரிக்கும் போதும்
பாம்பொன்று தன் சட்டை கழற்றுதல் போலும்
எந்த வித ஒலியுமின்றி
விரிகிறாய் எனக்குள் நீ...

வாழ்வெல்லாம் துடித்துச்
சாவதை விட
ஒற்றை நொடியில் இறந்து கிடக்கலாம்
சில மாதங்களாவது
நீ என்னை நேசிக்காமல் இருந்திருந்தால்...

கடவுளை தேடுபவன் ஒருவனை சந்திக்கிறேன்
வரும் வழியில் அவன் நாத்திகனாக இருந்தான்
ஒரு திறந்து கிடந்த சன்னலில்
உன் முகத்தை பார்த்திருக்க வேண்டும்
அவன் இனி கடவுளை பார்த்தென்ன...

ஒற்றைப் பனைமரக் கள்ளும் புளித்த மாவடுவுமாய்
அமர்ந்திருக்கும் ஒருவனுக்கு இதெல்லாம் புரியாது
அவனுக்குத் தேவையெல்லாம்
இன்னுமொரு பாட்டிலும்
தன்னிலை மறக்கும் போதையும்...