பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 4, 2012

தேவதையும் சாபமும்...

குருட்டுப் பிச்சைக்காரனின்
தட்டில் விழும் செல்லாக் காசென
அவனுக்கு அவன் தேவதை
சில வரங்களை தந்திருந்தாள்
அவளிருக்கும் வரை
அவ்வரங்கள் வாரங்களாக இருந்தது
பின்னர் அதுவே அவனுக்கு சாபங்களாக
அவன் தேவதையை
சபிக்கத் துவங்கினான்
இன்னொரு தேவதை வருகையில்
அவனுக்கு அப்பழைய தேவதையின்
நினைவு வருகிறது
அவளின் வரங்களை வேண்டாமெனச்
சொல்லி அவளுக்கு சாத்தானென
பெயரிடுகிறான்
அவனுக்கு நினைவிருக்கிறது
பழைய வரங்களும்
அதன் சுகங்களும்
ஆனாலும் அவன் இனியொரு
தேவதையை சபிக்க விரும்பவில்லை
அக் குருட்டுப் பிச்சைக் காரன்
தன்னிடம் உள்ள காசினை
நம்புகிறான்
அது அவனுக்கு அடுத்த வேளை
உணவளிக்கும் என்றும்...