பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 18, 2012

நேயர் விருப்பமென...

எதிர்பாரா வேளையொன்றில்
என் அனைத்து புலன்களும் சிதற
காற்றில் வருகிறது அப்பாடல்

முனுமுனுத்தபடி ரசிக்கிறேன்
இருவரும் கைகோர்த்து திரிகையில்
இப்பாடல் ஒலித்தது இருவருக்குள்ளும்

மிகவும் ரசித்த பாடல்களை
இன்று நான் தவிர்த்து விடுகிறேன்
அவை உன்னையும் நினைவு படுத்திவிடுவதால்

அப்படியிருந்தும் சில பண்பலைகள்
ஒலிபரப்பிக் கொண்டே தான் இருக்கிறது
நேயர் விருப்பமென,

மெல்லக் கசிகிறது அவ்வுயிரிசை
அருகில் சென்று ரசிக்கவும்
விலகிப் போகவும் மனமின்றி
இப்படியும் தவிக்க வேண்டித் தான் இருக்கிறது
சில நாட்களில்…