பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 14, 2012

முக நூல் 14.07.12

இந்த இரவும் புதிதாய் எதுவும் தந்து விடப் போவதில்லை, உன் நினைவுகளுடன் விழித்திருத்தலைத் தவிர...

விரக்தியின் விளிம்பில் இருக்கும் போது இயல்பான நகைச்சுவை கூட கேலி செய்வதாகவே தோன்றுகிறது.... 

உன்னுடைய நேசத்தை ஒளித்து வை, இன்னொரு ஜென்மத்திற்கும் போதுமானதாகவே இருக்கும் உன் மீதான என் நேசம்...

மணலில் மட்டுமல்ல மனதிலும் பதிகிறது உன் கால் தடங்கள்... 








ஒளித்து வைத்த
குடுவைகளை எடுத்துத் தருகிறாள்
சனிக்கிழமை மதியப் பொழுதொன்றில்
எப்பொழுதும் போல்
அதில் பாதியே இருக்கிறது
மீதியை அடுத்த வாரத்திற்கென
மறைத்து வைத்திருக்கிறாள்
என்றே நம்புகிறேன்
நீங்களும் அவ்வாறே...


பேரிசை...

புகைப்படம்: ஒரு சாவு வீட்டில் ஒலிக்கும் 
தப்பை ஒலியை ரசிக்கிறேன் 
என் கால்கள் தானாகவே 
தாளமிடுகின்றது 
இடையிடையே விட்டு விட்டுக் கேட்கிறது 
வீட்டினுள் ஊதும் சங்கின் ஒலி
தன் மூச்சை நிறுத்திக் கொண்ட 
ஒருவருக்காக 
இன்னொருவர் மூச்சடைக்கி ஊதுகிறார் 
அதுவும் இனிமையாகவே ஒலிக்கிறது 
பனியில் குளிர் காற்றில் 
குளிர்ந்து லயம் மாறும் தப்பைகள் 
ஓலைகள் எரிக்கப்பட வெப்பம் ஏறுகிறது 
மீண்டும் தாளம் 
அதற்கேற்ற நடனம் 
அவர்கள் ரசிப்பதற்காக ஆடுவதில்லை 
எனினும் 
ரசிப்பவர்களே அதிகம் 
தப்பைகளுக்கு நெருப்பு போல் 
அவர்களுக்கும் இடையிடையே 
தேவைப் படுகிறது சுதியும் சுருதியும் 
மிஞ்சிப் போனால் 
இன்னும் ஒரு மணி நேரம் 
அதன் பிறகு அவர்களுக்காக 
தப்பைகளின் ஒலிக்காக
சங்கின் பேரிசைக்காக 
காத்திருக்கிறேன் 
வீதியில் அடுத்த பெருசு யார் என்று விசாரித்தபடி?
ஒரு சாவு வீட்டில் ஒலிக்கும்
தப்பை ஒலியை ரசிக்கிறேன்
என் கால்கள் தானாகவே
தாளமிடுகின்றது
இடையிடையே விட்டு விட்டுக் கேட்கிறது
வீட்டினுள் ஊதும் சங்கின் ஒலி
தன் மூச்சை நிறுத்திக் கொண்ட
ஒருவருக்காக
இன்னொருவர் மூச்சடைக்கி ஊதுகிறார்
அதுவும் இனிமையாகவே ஒலிக்கிறது
பனியில் குளிர் காற்றில்
குளிர்ந்து லயம் மாறும் தப்பைகள்
ஓலைகள் எரிக்கப்பட வெப்பம் ஏறுகிறது
மீண்டும் தாளம்
அதற்கேற்ற நடனம்
அவர்கள் ரசிப்பதற்காக ஆடுவதில்லை
எனினும்
ரசிப்பவர்களே அதிகம்
தப்பைகளுக்கு நெருப்பு போல்
அவர்களுக்கும் இடையிடையே
தேவைப் படுகிறது சுதியும் சுருதியும்
மிஞ்சிப் போனால்
இன்னும் ஒரு மணி நேரம்
அதன் பிறகு அவர்களுக்காக
தப்பைகளின் ஒலிக்காக
சங்கின் பேரிசைக்காக
காத்திருக்கிறேன்
வீதியில் அடுத்த பெருசு யார் என்று விசாரித்தபடி?

அவளாகிய அவன்...

புகைப்படம்: அவள் எங்கிருக்கிறாள் 
அவள் எப்படி இருக்கிறாள்
யாருக்கும் தெரியவில்லை 
அவள் பற்றிய கவலையுமில்லை 
என்னுடன் தான் படித்தாள்
என்னுடன் தான் விளையாடினாள்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த நாள் வரை 
நான் அவள் என சொல்லிய அவள்
அவனாக இருந்தாள்
அவன் என சொல்லுவது பிடிக்காமல்
அவள் என்றே சொல்ல சொன்னாள்
அவள் ஆண் உடைகளை வெறுத்து ஒதுக்கினாள்
தனிமையில் அக்காவின் தாவணி அணிந்தாள்
மை பூசிக் கொண்டாள்
நகப் பூச்சால் அலங்கரித்தாள்
நடு வகிடெடுத்து பூக்களைச் சூடினாள்
அவள் தான் அழகாக இருப்பதாக உணர்ந்தாள்
அவள் குரல் உடையவே இல்லை
தனித்து ஒதுங்கினாள்
ஆண்கள் வரிசையில் நிற்க தயங்கினாள்
கழிவறைகளில் துயரப் பட்டாள்
இன்னும் இன்னும் 
நண்பர்கள் சிரித்தார்கள்
தோழிகள் வெறுத்தார்கள்
அவன் அவளாகியது குற்றமெனத் தூற்றினார்கள்
மனநிலை சரியில்லையென 
கோவிலில் மந்திரித்தார்கள்
தனியறையில் பூட்டினார்கள்
ஒரு மழைநாள் இரவொன்றில் 
அவளை காணவில்லை
ஊருக்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள்
அவளின் அக்காவுக்கு திருமணம் நடந்தது
அதன் பிறகும் அவளை காணவில்லை
இன்றுவரை பார்க்கவுமில்லை 
இப்பொழுதெல்லாம் கடைகளுக்கு 
கைகளைத் தட்டியபடி 
காசு கேட்டு வரும் ஒவ்வொரு பெண்ணின் 
முகத்திலும் அவளைத் தேடுகிறேன்
என்னால் முடிந்ததென்னவோ
ஐந்து ரூபாய் நாணயமும் 
ஐந்து நிமிட பேச்சுமே…
அவள் எங்கிருக்கிறாள்
அவள் எப்படி இருக்கிறாள்
யாருக்கும் தெரியவில்லை
அவள் பற்றிய கவலையுமில்லை
என்னுடன் தான் படித்தாள்
என்னுடன் தான் விளையாடினாள்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த நாள் வரை
நான் அவள் என சொல்லிய அவள்
அவனாக இருந்தாள்
அவன் என சொல்லுவது பிடிக்காமல்
அவள் என்றே சொல்ல சொன்னாள்
அவள் ஆண் உடைகளை வெறுத்து ஒதுக்கினாள்
தனிமையில் அக்காவின் தாவணி அணிந்தாள்
மை பூசிக் கொண்டாள்
நகப் பூச்சால் அலங்கரித்தாள்
நடு வகிடெடுத்து பூக்களைச் சூடினாள்
அவள் தான் அழகாக இருப்பதாக உணர்ந்தாள்
அவள் குரல் உடையவே இல்லை
தனித்து ஒதுங்கினாள்
ஆண்கள் வரிசையில் நிற்க தயங்கினாள்
கழிவறைகளில் துயரப் பட்டாள்
இன்னும் இன்னும்
நண்பர்கள் சிரித்தார்கள்
தோழிகள் வெறுத்தார்கள்
அவன் அவளாகியது குற்றமெனத் தூற்றினார்கள்
மனநிலை சரியில்லையென
கோவிலில் மந்திரித்தார்கள்
தனியறையில் பூட்டினார்கள்
ஒரு மழைநாள் இரவொன்றில்
அவளை காணவில்லை
ஊருக்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள்
அவளின் அக்காவுக்கு திருமணம் நடந்தது
அதன் பிறகும் அவளை காணவில்லை
இன்றுவரை பார்க்கவுமில்லை
இப்பொழுதெல்லாம் கடைகளுக்கு
கைகளைத் தட்டியபடி
காசு கேட்டு வரும் ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் அவளைத் தேடுகிறேன்
என்னால் முடிந்ததென்னவோ
ஐந்து ரூபாய் நாணயமும்
ஐந்து நிமிட பேச்சுமே…