பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 15, 2012

முக நூல் 15.07.12

ஒரு கவிதையை அல்ல, ஒரு எழுத்தைக் கூட எழுதி விட இயலாது அவள் நினைவுகளின்றி....

நம் ரகசியங்களை சிலரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம், அவர்களை அதீதமாக நம்புகிறோம்... அவர்கள் நமக்கு தரும் துயங்களையும் தாங்கியபடி...
 
தேடல் தொலைவதும், தேடலில் தொலைவதும் அவரவர் விருப்பம்....

இருள் மரம் உதிர்த்த
மலர்களால் நிறைந்திருக்கிறது வானம்…

எடுத்து வந்த கவிதை...

யாருக்கும் கிடைக்காத
கவிதையொன்று எனக்கு கிடைத்தது
யாருமற்ற தெருவில்
ஒரு மழைக் கால இரவொன்றில்
பதினொன்று என்று குறியிடப்பட்ட
புளிய மரத்திற்கு அருகில் கிடந்தது
அக் கவிதை மழையில் நனைந்திருந்தது
குளிர் அதனை நடுக்கி இருக்கக் கூடும்
அதன் எழுத்துகள் கோணலாகி இருந்தது
அருகில் வரையப்பட்டிருந்த
ஒரு வண்ணத்துப் பூச்சி
தன் சிறகுகளின் வர்ணத்தை இழந்திருந்தது
என் அறைக்கு கொண்டு வந்தேன்
சுவரில் ஒட்டி வைத்தேன்
தினமும் இரவில் உயிர்பெற்று அலைகிறது
இன்னும் படித்து விடாத அக்கவிதை
ஒரு சில முற்றுப் புள்ளிகளையும்
ஆச்சர்யக் குறிகளையும்
இறுதியாய் ஒரு கேள்விக் குறியோடும்
இருக்கக் கூடும் அக்கவிதை
இனியும் என்னால் உறக்கத்தை
தொலைத்து விட முடியாதென்று
அதே புளிய மரத்தை நோக்கிச் சென்றேன்
இடம் இருந்தது
மரம் இல்லை
நான் எதை எடுத்து வந்திருக்கிறேன் என்பதை
இப்போது உணர்ந்து கொண்டேன்...

அவன் நினைவு...

ஒரு குடிசையின் ஓரத்தில்
அமர்ந்திருந்தேன்
சற்று நேரத்தில் யாரவது ஒருவன்
தேடியபடி வரலாம்
பேரம் படிந்தால் அவனுடன் இந்த இரவு
முடிந்ததும் இன்னொருவனுக்கான காத்திருப்பு
இங்கே எல்லோருக்கும் ஆசை தான்
இருக்கும் ஒன்றை விட
தன்னிடம் இல்லாத ஒன்றின் மீது
இதோ இப்போது வருபவனும்
அப்படித் தான் போல
நடு வயது
கலைந்த கேசம்
மெலிந்த உடல்
அவன் தன்னை சோதிக்க விரும்பி இருக்க வேண்டும்
நான் அவன் கரன்சிகளுக்கு
ஒரு முயலாகவோ எலியாகவோ
அருகில் வந்தான்
எந்த பேரமும் இல்லை
சரி என்றான்
எனக்கு புரிந்தது அவன் புதிதென்று
முடிந்த வரை கறக்கலாம் கரன்சிகளை
குடித்திருக்க வில்லை
புகை நாற்றம் இருந்தது
அவன் வீடாக இருக்க வேண்டும்
தனியன் போல
வீட்டுக்குள் நுழைந்ததும்
கட்டிலில் விழுந்தான்
சீக்கிரம் என்று தயாரானேன்
ஒரு நாள் என்றான்
தொகை சொன்னேன்
ம்ம்ம் என்றான்
சமையலறையைக் காட்டினான்
சமைக்கச் சொன்னான்
சாப்பிட்டோம்
தொலைக்காட்சியில் படம் பார்த்தான்
அருகில் அமரச் சொன்னான்
மடியில் படுத்திருந்தான்
மாலையில் தேநீர் கேட்டான்
பிறகு இரவு உணவு
படுக்கை அறைக்கு சென்றான்
மெல்ல தவழும் படியாய்
இசையை ஒலிக்க விட்டான்
இரவுடைக்கு மாறினான்
அருகில் வந்து உறங்கச் சொன்னான்
கட்டிக் கொண்டு உறங்கிப் போனான்
காலையில் கையில் பணம் திணித்து
பேருந்து நிறுத்தம் வரை வந்தான்
அதன் பின்
அவனை பார்க்கவே இல்லை
ஒரு நாள் யாரும் வராத இரவொன்றில்
அவன் நினைவு வந்தது
அவன் வந்தால் போதும் என்றிருந்தது...

அவனுக்கு வலிக்கட்டும்....

புகைப்படம்: நீ தனியாகவும் இருக்கலாம்
சில அடிபொடிகளோடு சேர்ந்தும் கூட

முக்கியமானது
அவன் தனியாக இருக்க வேண்டும்
தனித்திருப்பவனை அடிப்பது சுலபம்

முதலில் எதிர்ப்பான்
முரள்வான்
முந்தி அவனை வீழ்த்து
முகம் மார்பு வயிறு கால்கள் கைகள்
எங்கும் அடி
அவன் துடிக்கட்டும்
அவனுக்கு வலிக்கட்டும்
அவன் அழுவான்

அழுகையை மறைப்பவன் எனில் இன்னும் அடி
முடியாத நிலையில்
அம்மா என அலறுவான்
செவிடனாய் இரு

ரத்தம் கசியும்
சதைகள் கிழியும்
சில எலும்புகளும் நொறுங்கக் கூடும்
அதைப் பற்றி கவலைப் படாதே
கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி விடக் கூடும்
அதற்குள் உன் இறுதி ஆயுதத்தை எடு

அது ஒரு இரும்பு குழாயாகவோ
கூரிய கத்தியாக
அரிவாளாகவோ இருக்கலாம்
துடிக்கத் துடிக்க கொல்

அதன் பிறகு ஒரு நொடி கூட
அவனைப் பார்க்காதே
வலிகளோடு அவன் இறந்து விடுவான்

ஒரு வேளை நீ சில நொடிகள்
அதை பார்க்கக் கூடும் எனில்
தனித்திருக்கும் ஒவ்வொரு இரவும்
அவன் வலிகளை சுமக்க நேரிடும் ...

.

@ மழைக் காதலன்
நீ தனியாகவும் இருக்கலாம்
சில அடிபொடிகளோடு சேர்ந்தும் கூட

முக்கியமானது
அவன் தனியாக இருக்க வேண்டும்
தனித்திருப்பவனை அடிப்பது சுலபம்

முதலில் எதிர்ப்பான்
முரள்வான்
முந்தி அவனை வீழ்த்து
முகம் மார்பு வயிறு கால்கள் கைகள்
எங்கும் அடி
அவன் துடிக்கட்டும்
அவனுக்கு வலிக்கட்டும்
அவன் அழுவான்

அழுகையை மறைப்பவன் எனில் இன்னும் அடி
முடியாத நிலையில்
அம்மா என அலறுவான்
செவிடனாய் இரு

ரத்தம் கசியும்
சதைகள் கிழியும்
சில எலும்புகளும் நொறுங்கக் கூடும்
அதைப் பற்றி கவலைப் படாதே
கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி விடக் கூடும்
அதற்குள் உன் இறுதி ஆயுதத்தை எடு

அது ஒரு இரும்பு குழாயாகவோ
கூரிய கத்தியாக
அரிவாளாகவோ இருக்கலாம்
துடிக்கத் துடிக்க கொல்

அதன் பிறகு ஒரு நொடி கூட
அவனைப் பார்க்காதே
வலிகளோடு அவன் இறந்து விடுவான்

ஒரு வேளை நீ சில நொடிகள்
அதை பார்க்கக் கூடும் எனில்
தனித்திருக்கும் ஒவ்வொரு இரவும்
அவன் வலிகளை சுமக்க நேரிடும் ...