பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 19, 2007
















தேநீரும்
சிகரெட் துண்டுகளும்
வாழ்வின் ஆதாரமாய்....


இதழ் தொலைத்து
தேடும்
புன்னகை பூக்கள்.....



பகலிலும்
வெளிச்சம் தேடும்
விழி பள்ளங்கள்....


எழுதுகோல் இன்றி
அறை எங்கும் நிறைந்து
கிடக்கும் வெற்று தாள்கள்....


இதயம் மட்டும்
உன் நினைவுகளால்
நிரம்பி கொண்டே....


வெளிப்படுத்த முடியாத
கோபமும்
காதலும்
கவிதையும்
மன நோயின் ஆரம்பம் அன்றி
வேறில்லை.....

ஆண் மகன்


பெண்மையின் பூரிப்பு

கட்டி கொண்ட மார்பின்

தீரா வேதனை

முழுமையின் கர்வம்

என்னுள்!!!!!!


பிறந்தது பெண்

என்ற போது கேட்டாய்

நம் குழந்தையா?

உன் குழந்தையா?


கோபம் தான்

ஒளித்து கொண்டு

சொன்னேன்

"உன் ஆண்மையில்

உனக்கு ஏன் சந்தேகம்"


இப்போது தெரிகிறது

உண்மையில்

நீ ஆண் மகன் இல்லை

அழகாய் சிரித்தது

உன் குழந்தை!!!!!!!

ரகசியமாகவே இருக்கட்டும்


முகம் புதைத்து அழ

உன் மடிஆதரவாய் சாய

உன் தோள்கள்

உலகம் சுற்ற கால்கள்

விவாதிக்க சொற்கள்

எல்லாம் சரிதான்

நான் ஆணாகவும்

நீ பெண்ணாகவும்

பிறக்காமல் போய்ருந்தால்

எனக்கென்னவோ

நம்மை தவிர

நம் ரகசியங்கள் அறிந்தவர்

எவரும் இல்லை

ஆனாலும்இது வரை

நீயாய் சொன்னதில்லை

உன்னை பற்றி!

ரகசியம் ரகசியமாகவே

இருக்கட்டும்.......