பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 13, 2012

முக நூல் 13.07.12

கடலில் பொழிந்தால் என்ன
மழை என்றே சொல்
வேறு எப்படியும்
சொல்ல இயலாது...

என் கனவுக்குள் விரியும்
இரவென நீ
ஒற்றை தீபத்தை கைகளில்
ஏந்தியபடி
சுகந்தம் வீசும் அவ்விரவை
தொலைத்து விடவில்லை நான்
எனினும்
அது கனவாகவே இருப்பதன்
கொடுமையும் எனக்கே....
 
இன்னும் ஏதோ ஒரு
ஒளிந்திருக்கும் சொல்லோ
பிரியமோ தான்
என்னை எழுத வைக்கிறது...

என் செய்திப் பெட்டியிலிருக்கும்
உன் செய்தித் துண்டுகளை
அடிக்கடி பார்க்கிறேன்
உன் குரலும்
முகமும்
அதில் இருக்கிறது...
 
போடி என
பாதியில் விட்டுச்
செல்கையில்
நீ அழுதது
விளையாட்டில்லை...

விளையாடும்
எந்த விளையாட்டிலும்
இருவருமே
தோற்றதில்லை
அதற்காகத் தானே
விளையாடுகிறோம்...

நீயும் நானும் விளையாடும்
சதுரங்கத்தில்
உன் முதல் குறி
என் ராணி
ஏன் என எனக்கு தெரியும்...

மயிலிறகும்
கனக்கத் தான் செய்யும்
காதலின்
தனிமை பொழுதொன்றில்...

என்னதான்
போலியாக
நீ நடித்தாலும்
உன் முகம்
எனக்கு தெரியும் தான்...



பொருளின் எடையை மதிப்பிடலாம் மனதின் சுமையை...



கவிதைகளையும், அதன் கருத்துகளையும் மட்டுமே பெண்கள் ரசிக்கிறார்கள். இதை புரிந்து கொண்டவன் தன் உறக்கத்திலிருந்து எழக்கூடும்...

 

No comments: