பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 14, 2012

அவளாகிய அவன்...

புகைப்படம்: அவள் எங்கிருக்கிறாள் 
அவள் எப்படி இருக்கிறாள்
யாருக்கும் தெரியவில்லை 
அவள் பற்றிய கவலையுமில்லை 
என்னுடன் தான் படித்தாள்
என்னுடன் தான் விளையாடினாள்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த நாள் வரை 
நான் அவள் என சொல்லிய அவள்
அவனாக இருந்தாள்
அவன் என சொல்லுவது பிடிக்காமல்
அவள் என்றே சொல்ல சொன்னாள்
அவள் ஆண் உடைகளை வெறுத்து ஒதுக்கினாள்
தனிமையில் அக்காவின் தாவணி அணிந்தாள்
மை பூசிக் கொண்டாள்
நகப் பூச்சால் அலங்கரித்தாள்
நடு வகிடெடுத்து பூக்களைச் சூடினாள்
அவள் தான் அழகாக இருப்பதாக உணர்ந்தாள்
அவள் குரல் உடையவே இல்லை
தனித்து ஒதுங்கினாள்
ஆண்கள் வரிசையில் நிற்க தயங்கினாள்
கழிவறைகளில் துயரப் பட்டாள்
இன்னும் இன்னும் 
நண்பர்கள் சிரித்தார்கள்
தோழிகள் வெறுத்தார்கள்
அவன் அவளாகியது குற்றமெனத் தூற்றினார்கள்
மனநிலை சரியில்லையென 
கோவிலில் மந்திரித்தார்கள்
தனியறையில் பூட்டினார்கள்
ஒரு மழைநாள் இரவொன்றில் 
அவளை காணவில்லை
ஊருக்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள்
அவளின் அக்காவுக்கு திருமணம் நடந்தது
அதன் பிறகும் அவளை காணவில்லை
இன்றுவரை பார்க்கவுமில்லை 
இப்பொழுதெல்லாம் கடைகளுக்கு 
கைகளைத் தட்டியபடி 
காசு கேட்டு வரும் ஒவ்வொரு பெண்ணின் 
முகத்திலும் அவளைத் தேடுகிறேன்
என்னால் முடிந்ததென்னவோ
ஐந்து ரூபாய் நாணயமும் 
ஐந்து நிமிட பேச்சுமே…
அவள் எங்கிருக்கிறாள்
அவள் எப்படி இருக்கிறாள்
யாருக்கும் தெரியவில்லை
அவள் பற்றிய கவலையுமில்லை
என்னுடன் தான் படித்தாள்
என்னுடன் தான் விளையாடினாள்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த நாள் வரை
நான் அவள் என சொல்லிய அவள்
அவனாக இருந்தாள்
அவன் என சொல்லுவது பிடிக்காமல்
அவள் என்றே சொல்ல சொன்னாள்
அவள் ஆண் உடைகளை வெறுத்து ஒதுக்கினாள்
தனிமையில் அக்காவின் தாவணி அணிந்தாள்
மை பூசிக் கொண்டாள்
நகப் பூச்சால் அலங்கரித்தாள்
நடு வகிடெடுத்து பூக்களைச் சூடினாள்
அவள் தான் அழகாக இருப்பதாக உணர்ந்தாள்
அவள் குரல் உடையவே இல்லை
தனித்து ஒதுங்கினாள்
ஆண்கள் வரிசையில் நிற்க தயங்கினாள்
கழிவறைகளில் துயரப் பட்டாள்
இன்னும் இன்னும்
நண்பர்கள் சிரித்தார்கள்
தோழிகள் வெறுத்தார்கள்
அவன் அவளாகியது குற்றமெனத் தூற்றினார்கள்
மனநிலை சரியில்லையென
கோவிலில் மந்திரித்தார்கள்
தனியறையில் பூட்டினார்கள்
ஒரு மழைநாள் இரவொன்றில்
அவளை காணவில்லை
ஊருக்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள்
அவளின் அக்காவுக்கு திருமணம் நடந்தது
அதன் பிறகும் அவளை காணவில்லை
இன்றுவரை பார்க்கவுமில்லை
இப்பொழுதெல்லாம் கடைகளுக்கு
கைகளைத் தட்டியபடி
காசு கேட்டு வரும் ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் அவளைத் தேடுகிறேன்
என்னால் முடிந்ததென்னவோ
ஐந்து ரூபாய் நாணயமும்
ஐந்து நிமிட பேச்சுமே…

No comments: