பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Feb 4, 2012

சுதந்திரம் வெறும் வார்த்தையில்..


சுதந்திரத்தை பற்றி எழுத
எனக்கு ஆர்வம் இல்லை -ஏன்னெனில்
இல்லாத ஒன்றை பற்றி
என்னதான் எழுதுவது ?

இதை பற்றி நினைக்கும் போதே
நாம் தொலைத்த ஒவ்வொன்றும்
எனக்குள்
சோக ஊர்வலமாய்

ஆட்டு மந்தைகளாய்
எங்களை
வெட்ட வெளியில்
அடைத்துவிட்டு
நடுவில் சுதந்திரக்கொடி
சுதந்திரமாய் பறக்க விடப்பட்டுள்ளது

சுதந்திரத்தை பற்றி
சத்தமாய் நீ பேசினால்
உன் சத்தம் வெளியே எப்போதும் கேட்காது
இங்கே பேச்சில் மட்டும் தான்
சுதந்திரம் -ஆனால்
வெளியே எதுவும் இல்லை
எல்லாம் அவர்களுக்குள் மட்டுமே...

- மதிவதனி...

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வேதனையாக இருக்கிறது.
நன்றி.

எஸ்.மதி said...

என்ன சொல்ல நான். இது எங்கள் வேதனையின் வலிகள் மட்டுமே ..
நன்றி நட்பே என் கவிதையின் வலிகளை பகிர்ந்தமைக்கு ........