பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 6, 2007

ஊளையிட்ட தெரு நாய்




























வீதியெங்கும் சிதறிய குருதியில்


தெரிய வில்லை

நீ எந்த மதம் என்பது....


ஆனாலும் சாகும் வரை

உன்னிடம் கேட்க பட்டது

அது மட்டுமே......


கை விலங்குகள்

விலக்கப்பட்ட போதும்

இன்னும் கழற்ற படாமலேயே

இருக்கிறது தீண்டாமை......


இரட்டை குவளைகளை

இன்னமும் காண்கிறேன்

வழி நெடுக்கும்......


ஆங்கிலேய அறிவு

அப்படியே பிரித்து வைக்கிறது

அரசியல் புண்ணியத்தில்......


இன்னமும் சொல்லுகிறார்கள்

நீங்கள் இன்று வெட்டி கொண்டு

மாண்டத்துக்கு

அகால வேளையில்

ஊளையிட்ட தெரு நாய்

தான் காரணம் என்று.....

2 comments:

M.Rishan Shareef said...

வீதியெங்கும் சிதறிய குருதியில்
தெரிய வில்லை
நீ எந்த மதம் என்பது....
ஆனாலும் சாகும் வரை
உன்னிடம் கேட்க பட்டது
அது மட்டுமே......



இன்னமும் சொல்லுகிறார்கள்
நீங்கள் இன்று வெட்டி கொண்டு மாண்டதுக்கு
அகால வேளையில்
ஊளையிட்ட தெரு நாய்
தான் காரணம் என்று.....

மிக அழகான வரிகள்.

இஸ்பஹான் சாப்தீன். said...


"வீதியெங்கும் சிதறிய குருதியில்
தெரிய வில்லை
நீ எந்த மதம் என்பது....
ஆனாலும் சாகும் வரை
உன்னிடம் கேட்க பட்டது
அது மட்டுமே......"

மனிதம் தொலைந்து போன இடம் எங்கே?
தெரிகிறது இந்த வரிகளின் வலியில்...
சிறந்த வரிகள்...
கவிப்பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
இஸ்பஹான் சாப்தீன்
www.isbahan.com
2013.12.05 (10:41AM)