பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 3, 2007

காதல் தூக்கு....


எப்பொழுதோ நிகழ்ந்த

மூன்றாம் பிறை

நாளின்சந்திப்பு

இருவருக்கும் முக்கியமாகி போனது

கண்கள் சந்தித்த

அந்த சில நொடிகளில்.....

கையில் கிடைத்த

சிறு சணல் குப்பைகளை

விருப்பமாய் கொண்டு

பின்னபபட்டது காதல் கயிறு...

சரியாய் பொருந்தியது

அவரவர் குரல் வளைக்கு!!

தலைகள் தவிர்த்து

வெளியேவர மனமின்றி

தொடரும் கதறல்

மூச்சிரைப்பு "நம் காதல்" என்...

தூக்கில் தொங்கிய

பின்அவசர விடுதலைக்காய்

பிரார்த்திக்கிறோம்

முகம் தெரியாத

மற்றவர்களின் வருகைக்காய்....

கடந்த காலத்தின் சுகங்கள்

நிகழ் கால சோகங்கள்

இவற்றோடு

புலன்கள் திணறி

வாழ்வின் நிமிடங்கள்.....

காட்டு பூவின் மனத்தை

நுகர செய்து

வாசனைகளை பட்டியலிடும்

கடைசி நேர

உயிர் காற்று....

நதியில் பிடித்த

வண்ண மீன்களை

உன் வீட்டு கண்ணாடி குடுவையிலும்

அதிகாலை பறவையின் குரலை

உன் வீட்டு அழைப்பு மணியிலும்

பூ ஒன்றின் மென்மையை

உன் வீட்டு தோட்டத்திலும்

கண்டு கொண்டாடிய

என் நேற்றைய வினாடிகள்

இதமாக்குவது போல்

இறுக்கமாக்கி போகிறது

தலைகளை...

நிச்சயமாய்

இருந்து விடாத

புத்தகம் ஒன்றையும்

சொல்லாத வார்த்தைகளை

சொல்லவும்அடிக்கடி வந்திருக்கிறேன்

உன்னிடம்....

இன்றோடுமுடிந்து

விடப்போகிறது என்நினைக்கும்

இறுக்கம் தொடர்ந்து

கொண்டே இருக்கிறது

நிகழ் கால கனவுகளின்

நிஜமானஇறுக்கத்தில்....

1 comment:

விச்சு said...

இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html