பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 10, 2012

முனுமுனுக்கும் பாடல்...

அவனுக்கான பாடலை
அவனே முனுமுனுக்கட்டும் விட்டு விடுங்கள்
அவனிடம் தாளங்களைப் பற்றியோ
சந்தங்களைப் பற்றியோ
யாரும் கேட்காதீர்கள்
அவனுக்கு அவையெல்லாம்
தெரிந்து விட நியாயமில்லை
பல்லவிகளும் சரணமும் அற்று
அவன் பாடல் ஒலிக்கும்
உங்களால் அவன் பாடலை
ரசிக்க முடியாமல் போகலாம்
அவனைக் குற்றம் சொல்லாதீர்கள்
அவனிடம் உங்களுக்கான
ஒரு ராகத்தை எதிர்பார்க்காதீர்கள்
அவன் தன் துயரத்தைப் பாடுகிறான்
அவன் தன் மகிழ்வைப் பாடுகிறான்
அவன் தன் இயல்பைப் பாடுகிறான்
அவன் பாடுவது பாடலே இல்லையெனும் போதும்
அவன் தன் வாழ்விற்காகவும் பாடக் கூடும்
இன்னுமொரு உயிரின் நினைவுக்காகவும்
பாடியபடியே இறந்து விடவும் கூடும்...

No comments: