பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 5, 2012

மன்னிப்பும் தண்டனையும்...

மன்னிப்புகள் கிடைக்குமென்றே
குற்றங்கள் தொடங்குகின்றன
தண்டனைகளும் பெயரளவுக்கே
இன்றோ நீ பேச மறுத்து
விலகி போவதில் தெரிகிறது
என் குற்றங்கள்...

உன் பெரும் கருணையை
எதிர் பார்த்து நிற்கிறேன்
நொடிப் பொழுதில் கடந்து விடுகிறாய்
என்னையும்
என் நினைவுகளையும்
ஒரு புயலென...

என் வேடிக்கைகளும் பரிகாசங்களும்
உனக்கு புதிதல்ல
அது நமக்குள் இருக்க வேண்டும்
என்பதாக இருக்கிறது
உன் வேண்டுதல்
சில நேரங்களில் எனக்கான
லட்சுமணக் கோட்டை தாண்டி விடுகிறேன்...

நீயோ பிடிவாதக்காரியாய்
முகம் மறைத்து
குரல் மறைத்து
தனிமையில் விட்டுச் செல்கிறாய்
எப்பொழுதும் தவறுகளுக்கான தண்டனை
தனிமை படுத்துதல்
என்பதாகவே இருந்துவிடுகிறது...

:-(

Jul 4, 2012

தேவதையும் சாபமும்...

குருட்டுப் பிச்சைக்காரனின்
தட்டில் விழும் செல்லாக் காசென
அவனுக்கு அவன் தேவதை
சில வரங்களை தந்திருந்தாள்
அவளிருக்கும் வரை
அவ்வரங்கள் வாரங்களாக இருந்தது
பின்னர் அதுவே அவனுக்கு சாபங்களாக
அவன் தேவதையை
சபிக்கத் துவங்கினான்
இன்னொரு தேவதை வருகையில்
அவனுக்கு அப்பழைய தேவதையின்
நினைவு வருகிறது
அவளின் வரங்களை வேண்டாமெனச்
சொல்லி அவளுக்கு சாத்தானென
பெயரிடுகிறான்
அவனுக்கு நினைவிருக்கிறது
பழைய வரங்களும்
அதன் சுகங்களும்
ஆனாலும் அவன் இனியொரு
தேவதையை சபிக்க விரும்பவில்லை
அக் குருட்டுப் பிச்சைக் காரன்
தன்னிடம் உள்ள காசினை
நம்புகிறான்
அது அவனுக்கு அடுத்த வேளை
உணவளிக்கும் என்றும்...

Jul 3, 2012

எரிதல் என்பது...

புகைப்படம்: மெல்ல மெல்ல பற்றி எரிகிறது அக்காடு 
பூத்திருக்கும் மலர்கள் 
மரங்களின் பறவைகள்  
நுண்ணுயிர்கள் 
கவலைப் பட்டதாகத் தெரியவில்லை 
காற்று வீசுமிடமெல்லாம்
அதனையும் சேர்த்தபடி எரிக்கத் துவங்கியது
அவளும் அப்படித்தான் 
என் ஆசைகள் 
என் கனவுகள் 
வாழ்வு என எரிக்கத் துவங்கினாள்
காதல் அதன் போக்கில் எரிந்தபடியே... 
நாளை காட்டிலும் என்னிலும்  
சாம்பல் மிஞ்சியது என்பது 
வெறும் செய்தி மட்டுமே அல்ல...
மெல்ல மெல்ல பற்றி எரிகிறது அக்காடு
பூத்திருக்கும் மலர்கள்
மரங்களின் பறவைகள்
நுண்ணுயிர்கள்
கவலைப் பட்டதாகத் தெரியவில்லை
காற்று வீசுமிடமெல்லாம்
அதனையும் சேர்த்தபடி எரிக்கத் துவங்கியது
அவளும் அப்படித்தான்
என் ஆசைகள்
என் கனவுகள்
வாழ்வு என எரிக்கத் துவங்கினாள்
காதல் அதன் போக்கில் எரிந்தபடியே...
நாளை காட்டிலும் என்னிலும்
சாம்பல் மிஞ்சியது என்பது
வெறும் செய்தி மட்டுமே அல்ல...

அதிர்ஷ்டமில்லாதவன்...

புகைப்படம்: அவன் தன்னை அதிர்ஷ்டமில்லாதவன் 
என்றே கூறிக் கொண்டான் 
அவனுக்கு கைகளில் எந்தக் குறையுமில்லை 
நன்றாக நடக்கவும் ஓடவும் முடியும் 
இலக்கியம் பற்றி சிறிது பேசவும் 
இசைகள் கேட்கவும் முடியும் தான் 
கல்வியும் இலவசமாகவே 
உடல் உழைப்பில்லாத வேலை 
கணினியும் இணையமும்  
அலுவலகத்தில் 
தேவைக்கேற்ற ஊதியம் 
உடைகள் 
காலணிகள் 
விலையுர்ந்த அலைபேசி 
மேலும் ஒரு இருசக்கர வாகனம் 
நல்ல நட்புகள் சுற்றிலும்  
எதையும் விட்டுத் தரும் 
தாயும் தந்தையும்  
அவன் தான் சொன்னான் 
அவன் அவளை நேசித்ததை 
தன்னுடன் அவள் இல்லாத வாழ்வில்
என்றுமே தான் ஒரு  
அதிர்ஷ்டமில்லாதவன் என்று... 
...
..
.
அவனுக்கு பதிலாக 
நீங்கள் என்ன சொல்வீர்கள் ?
அதையே தான் நானும் சொன்னேன்....
பளார்... 
கன்னம் சிவக்க...
அவன் தன்னை அதிர்ஷ்டமில்லாதவன்
என்றே கூறிக் கொண்டான்
அவனுக்கு கைகளில் எந்தக் குறையுமில்லை
நன்றாக நடக்கவும் ஓடவும் முடியும்
இலக்கியம் பற்றி சிறிது பேசவும்
இசைகள் கேட்கவும் முடியும் தான்
கல்வியும் இலவசமாகவே
உடல் உழைப்பில்லாத வேலை
கணினியும் இணையமும்
அலுவலகத்தில்
தேவைக்கேற்ற ஊதியம்
உடைகள்
காலணிகள்
விலையுர்ந்த அலைபேசி
மேலும் ஒரு இருசக்கர வாகனம்
நல்ல நட்புகள் சுற்றிலும்
எதையும் விட்டுத் தரும்
தாயும் தந்தையும்
அவன் தான் சொன்னான்
அவன் அவளை நேசித்ததை
தன்னுடன் அவள் இல்லாத வாழ்வில்
என்றுமே தான் ஒரு
அதிர்ஷ்டமில்லாதவன் என்று...
...
..
.
அவனுக்கு பதிலாக
நீங்கள் என்ன சொல்வீர்கள் ?
அதையே தான் நானும் சொன்னேன்....
பளார்...
கன்னம் சிவக்க...